بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
وَإِذۡ قِيلَ لَهُمُ ٱسۡكُنُواْ هَٰذِهِ ٱلۡقَرۡيَةَ وَكُلُواْ مِنۡهَا حَيۡثُ شِئۡتُمۡ وَقُولُواْ حِطَّةٞ وَٱدۡخُلُواْ ٱلۡبَابَ سُجَّدٗا نَّغۡفِرۡ لَكُمۡ خَطِيٓـَٰٔتِكُمۡۚ سَنَزِيدُ ٱلۡمُحۡسِنِينَ
இன்னும், (இஸ்ரவேலர்களாகிய) அவர்களுக்கு கூறப்பட்ட சமயத்தை நினைவு கூருங்கள்: “நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இன்னும், நீங்கள் நாடிய இடத்தில் புசியுங்கள். ‘ஹித்ததுன்’ (பாவம் நீங்கட்டும்!) என்று கூறுங்கள். இன்னும், சிரம் தாழ்த்தியவர்களாக (ஊர்) வாசலில் நுழையுங்கள். நாம் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்போம். நல்லறம் புரிவோருக்கு (நற்கூலியை) அதிகப்படுத்துவோம்.”
فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡ قَوۡلًا غَيۡرَ ٱلَّذِي قِيلَ لَهُمۡ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَظۡلِمُونَ
ஆக, அவர்களில் நிராகரித்தவர்கள், அவர்களுக்கு எது கூறப்பட்டதோ அது அல்லாத ஒரு சொல்லாக மாற்றி(க் கூறி)னர். ஆகவே, அவர்கள் அநியாயம் (-பாவம்) செய்பவர்களாக இருந்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து (கடுமையான) தண்டனையை இறக்கினோம்.
وَسۡـَٔلۡهُمۡ عَنِ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَتۡ حَاضِرَةَ ٱلۡبَحۡرِ إِذۡ يَعۡدُونَ فِي ٱلسَّبۡتِ إِذۡ تَأۡتِيهِمۡ حِيتَانُهُمۡ يَوۡمَ سَبۡتِهِمۡ شُرَّعٗا وَيَوۡمَ لَا يَسۡبِتُونَ لَا تَأۡتِيهِمۡۚ كَذَٰلِكَ نَبۡلُوهُم بِمَا كَانُواْ يَفۡسُقُونَ
இன்னும் (நபியே) கடலுக்கருகில் இருந்த ஊர் (மக்களைப்) பற்றி அவர்களிடம் விசாரிப்பீராக. சனிக்கிழமையில் அவர்கள் எல்லை மீறியபோது, அவர்களின் சனிக்கிழமையில் அவர்களுடைய மீன்கள் தலைகளை நீட்டியவையாக அவர்களிடம் வந்தபோது (அவர்களை நாம் சோதித்தோம்). இன்னும் அவர்கள் சனிக் கிழமை அல்லாத (வேறு ஒரு) நாளில் இருக்கும்போது அவர்களிடம் அவை (அந்தளவு அதிகமாக) வருவதில்லை. அவர்கள் (அல்லாஹ்வின்) கட்டளையை மீறுபவர்களாக இருந்த காரணத்தால் இவ்வாறு அவர்களை சோதித்தோம்.
وَإِذۡ قَالَتۡ أُمَّةٞ مِّنۡهُمۡ لِمَ تَعِظُونَ قَوۡمًا ٱللَّهُ مُهۡلِكُهُمۡ أَوۡ مُعَذِّبُهُمۡ عَذَابٗا شَدِيدٗاۖ قَالُواْ مَعۡذِرَةً إِلَىٰ رَبِّكُمۡ وَلَعَلَّهُمۡ يَتَّقُونَ
இன்னும், “அல்லாஹ் அவர்களை அழிப்பவனாக அல்லது கடுமையான தண்டனையால் அவர்களை தண்டிப்பவனாக உள்ள மக்களுக்கு (நீங்கள்) ஏன் உபதேசிக்கிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு கூட்டம் கூறியபோது, “உங்கள் இறைவனிடம் (எங்கள்) நியாயத்தை கூறுவதற்காகவும், அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும் (அதிலிருந்து விலகுவதற்காகவும் அவர்களுக்கு உபதேசிக்கிறோம்)” என்று கூறினார்கள்.
فَلَمَّا نَسُواْ مَا ذُكِّرُواْ بِهِۦٓ أَنجَيۡنَا ٱلَّذِينَ يَنۡهَوۡنَ عَنِ ٱلسُّوٓءِ وَأَخَذۡنَا ٱلَّذِينَ ظَلَمُواْ بِعَذَابِۭ بَـِٔيسِۭ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ
ஆக, அவர்கள் (தங்களுக்கு) உபதேசிக்கப்பட்டதை மறந்தபோது தீமையை விட்டும் (மக்களை) தடுத்தவர்களைப் பாதுகாத்தோம். இன்னும், பாவம் செய்தவர்களை - அவர்கள் (அல்லாஹ்வின்) கட்டளையை மீறுபவர்களாக இருந்த காரணத்தால் - கடுமையான தண்டனையால் பிடித்தோம்.
فَلَمَّا عَتَوۡاْ عَن مَّا نُهُواْ عَنۡهُ قُلۡنَا لَهُمۡ كُونُواْ قِرَدَةً خَٰسِـِٔينَ
ஆக, அவர்கள் தங்களுக்கு தடுக்கப்பட்டதை மீறியபோது, “குரங்குகளாக (மக்களை விட்டும் அல்லாஹ்வின் அருளிருந்தும்) விரட்டப்பட்டவர்களாக இழிவானவர்களாக ஆகிவிடுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம்.
وَإِذۡ تَأَذَّنَ رَبُّكَ لَيَبۡعَثَنَّ عَلَيۡهِمۡ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ مَن يَسُومُهُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِۗ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ ٱلۡعِقَابِ وَإِنَّهُۥ لَغَفُورٞ رَّحِيمٞ
(நபியே!) இன்னும் கொடிய தண்டனையால் அவர்களை துன்புறுத்துபவர்களை அவர்கள் மீது மறுமை நாள் வரை நிச்சயமாக அவன் அனுப்புவான் என்று உம் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூர்வீராக. நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். இன்னும், நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.
وَقَطَّعۡنَٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أُمَمٗاۖ مِّنۡهُمُ ٱلصَّـٰلِحُونَ وَمِنۡهُمۡ دُونَ ذَٰلِكَۖ وَبَلَوۡنَٰهُم بِٱلۡحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ
இன்னும், அவர்களை பூமியில் பல பிரிவுகளாகப் பிரித்தோம். அவர்களில் நல்லவர்களும் உண்டு; அவர்களில் மற்ற (பொல்லாத)வர்களும் உண்டு. இன்னும், அவர்கள் (சத்தியத்தின் பக்கம்) திரும்புவதற்காக இன்பங்கள் இன்னும் துன்பங்களால் அவர்களைச் சோதித்(து வந்)தோம்.
فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٞ وَرِثُواْ ٱلۡكِتَٰبَ يَأۡخُذُونَ عَرَضَ هَٰذَا ٱلۡأَدۡنَىٰ وَيَقُولُونَ سَيُغۡفَرُ لَنَا وَإِن يَأۡتِهِمۡ عَرَضٞ مِّثۡلُهُۥ يَأۡخُذُوهُۚ أَلَمۡ يُؤۡخَذۡ عَلَيۡهِم مِّيثَٰقُ ٱلۡكِتَٰبِ أَن لَّا يَقُولُواْ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلۡحَقَّ وَدَرَسُواْ مَا فِيهِۗ وَٱلدَّارُ ٱلۡأٓخِرَةُ خَيۡرٞ لِّلَّذِينَ يَتَّقُونَۚ أَفَلَا تَعۡقِلُونَ
ஆக, அவர்களுக்குப் பின்னால் சில தீயோர் தோன்றினார்கள். (அவர்கள்) வேதத்திற்கு வாரிசுகளாக ஆகினர். (வேத சட்டங்களை மாற்றி அதற்குப் பகரமாக) இந்த அற்பமான (உலகத்)தின் செல்வத்தை வாங்குகிறார்கள். இன்னும், “எங்களை மன்னிக்கப்படும்” என்றும் கூறுகிறார்கள். இதுபோன்ற (அற்ப) செல்வம் அவர்களுக்கு வந்தால் அதையும் வாங்குவார்கள். அல்லாஹ் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் கூறக்கூடாது என்று அவர்கள் மீது வேதத்தின் உறுதிமொழி எடுக்கப்படவில்லையா? அதிலுள்ளதை (அவர்கள்) படித்து (அறிந்து)ள்ளனர். அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு மறுமை வீடுதான் மிகச் சிறந்ததாகும். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
وَٱلَّذِينَ يُمَسِّكُونَ بِٱلۡكِتَٰبِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ ٱلۡمُصۡلِحِينَ
எவர்கள் தொழுகையை நிலைநிறுத்தி, வேதத்தை (கற்றும் கற்பித்தும் செயல் படுத்தியும்) உறுதியாக பற்றிப் பிடிப்பார்களோ அவர்கள் (இத்தகைய) சீர்திருத்தவாதிகளின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்.