Languages⌄

ஸூரா அல்-பகரா

அனுவாதம், லிப்யந்தரன், தஃப்சீர் - இருந்து [111-120] வரை
 
வசனம் 111 இல் 286

وَقَالُواْ لَن يَدۡخُلَ ٱلۡجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ تِلۡكَ أَمَانِيُّهُمۡۗ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

Wa qaaloo lai yadkhulal jannata illaa man kaana Hoodan aw Nasaaraa; tilka amaaniyyuhum; qul haatoo burhaa nakum in kuntum saadiqeen
இன்னும், “யார் யூதர்களாக, அல்லது கிறித்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தவிர (எவரும்) சொர்க்கத்தில் நுழையவே மாட்டார்” என (அவர்கள்) கூறினார்கள். அவை அவர்களுடைய வீண் நம்பிக்கைகளாகும்! (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.”
வசனம் 112 இல் 286

بَلَىٰۚ مَنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ فَلَهُۥٓ أَجۡرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ

Balaa man aslama wajhahoo lillaahi wa huwa muhsinun falahooo ajruhoo 'inda rabbihee wa laa khawfun 'alaihim wa laa hum yahzanoon
அவ்வாறன்று! எவர், தான் நன்மை செய்பவராக இருந்த நிலையில் தனது முகத்தை (முற்றிலும்) அல்லாஹ்விற்குப் பணியவைப்பாரோ, அவருக்கு அவருடைய கூலி அவருடைய இறைவனிடம் (நிறைவாக) உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
வசனம் 113 இல் 286

وَقَالَتِ ٱلۡيَهُودُ لَيۡسَتِ ٱلنَّصَٰرَىٰ عَلَىٰ شَيۡءٖ وَقَالَتِ ٱلنَّصَٰرَىٰ لَيۡسَتِ ٱلۡيَهُودُ عَلَىٰ شَيۡءٖ وَهُمۡ يَتۡلُونَ ٱلۡكِتَٰبَۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ مِثۡلَ قَوۡلِهِمۡۚ فَٱللَّهُ يَحۡكُمُ بَيۡنَهُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ فِيمَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ

Wa qaalatil Yahoodu laisatin Nasaaraa 'alaa shai'inw-wa qaalatin Nasaaraaa laisatil Yahoodu 'alaa shai'inw'wa hum yatloonal Kitaab; kazaalika qaalal lazeena la ya'lamoona misla qawlihim; fallaahu yahkumu bainahum Yawmal Qiyaamati feemaa kaanoo feehi yakhtalifoon
இன்னும், கிறித்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை என யூதர்கள் கூறினார்கள். இன்னும் யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை எனக் கிறித்தவர்கள் கூறினார்கள். அவர்களோ (ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவ்வாறே இவர்களுடைய கூற்றைப் போன்று (வேதத்தை) அறியாதவர்கள் (யூதர்களும் கிறித்தவர்களும் பின்பற்றுவது மார்க்கமே இல்லை எனக்) கூறினார்கள். ஆக, இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதில் மறுமை நாளன்று அல்லாஹ் இவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான்.
வசனம் 114 இல் 286

وَمَنۡ أَظۡلَمُ مِمَّن مَّنَعَ مَسَٰجِدَ ٱللَّهِ أَن يُذۡكَرَ فِيهَا ٱسۡمُهُۥ وَسَعَىٰ فِي خَرَابِهَآۚ أُوْلَـٰٓئِكَ مَا كَانَ لَهُمۡ أَن يَدۡخُلُوهَآ إِلَّا خَآئِفِينَۚ لَهُمۡ فِي ٱلدُّنۡيَا خِزۡيٞ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابٌ عَظِيمٞ

Wa man azlamu mimmam-mana'a masaajidal laahi ai-yuzkara feehas muhoo wa sa'aa fee kharaabihaaa; ulaaa'ika maa kaana lahum ai yadkhuloohaaa illaa khaaa'ifeen; lahum fiddunyaa khizyunw wa lahum fil aakhirati 'azaabun 'azeem
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவை பாழாகுவதில் முயற்சி செய்பவனை விட மகா அநியாயக்காரன் யார்? அவர்களோ பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு அனுமதி இருக்கவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. இன்னும் அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு.
வசனம் 115 இல் 286

وَلِلَّهِ ٱلۡمَشۡرِقُ وَٱلۡمَغۡرِبُۚ فَأَيۡنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجۡهُ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ وَٰسِعٌ عَلِيمٞ

Wa lillaahil mashriqu walmaghrib; fa aynamaa tuwalloo fasamma wajhullaah; innal laaha waasi'un Aleem
இன்னும், கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. ஆக, நீங்கள் எங்கெல்லாம் (முகத்தைத்) திருப்பினாலும் அங்கு அல்லாஹ்வுடைய முகம் இருக்கிறது! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன் நன்கறிந்தவன் ஆவான்.
வசனம் 116 இல் 286

وَقَالُواْ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۖ بَل لَّهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ

Wa qaalut takhazal laahu waladan subhaanahoo bal lahoo maa fis samaawaati wal ardi kullul lahoo qaanitoon
அல்லாஹ் “சந்ததியை எடுத்துக் கொண்டான்” என்று கூறுகிறார்கள். - அவனோ மிகப் பரிசுத்தமானவன். - மாறாக, வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனுக்குரியனவே! எல்லோரும் அவனுக்கு பணிந்தவர்களே.
வசனம் 117 இல் 286

بَدِيعُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

Badeee'us samaawaati wal ardi wa izaa qadaaa amran fa innamaa yaqoolu lahoo kun fayakoon
(அவன்) வானங்கள் இன்னும் பூமியை புதுமையாக படைத்தவன். அவன் ஒரு காரியத்தை (செய்வதற்கு) முடிவு செய்தால், அதற்கு அவன் கூறுவதெல்லாம் “ஆகு!” என்றுதான். உடனே, அது ஆகிவிடும்.
வசனம் 118 இல் 286

وَقَالَ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ لَوۡلَا يُكَلِّمُنَا ٱللَّهُ أَوۡ تَأۡتِينَآ ءَايَةٞۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِم مِّثۡلَ قَوۡلِهِمۡۘ تَشَٰبَهَتۡ قُلُوبُهُمۡۗ قَدۡ بَيَّنَّا ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يُوقِنُونَ

Wa qaalal lazeena laa ya'lamoona law laa yukallimunal laahu aw taateenaaa aayah; kazaalika qaalal lazeena min qablihim misla qawlihim; tashaabahat quloobuhum; qad baiyannal aayaati liqawminy yooqinoon
இன்னும், (வேதத்தை) அறியாதவர்கள், “அல்லாஹ் எங்களுடன் பேச வேண்டாமா? அல்லது, ஒரு வசனம் எங்களுக்கு வரவேண்டாமா?” என்று கூறினார்கள். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இவர்களின் கூற்றைப் போன்றே கூறினார்கள். இவர்களுடைய உள்ளங்கள் (அனைத்தும்) ஒன்றுக்கொன்று ஒப்பாகி (ஒரே மாதிரி) இருக்கின்றன. (உண்மையை) உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு வசனங்களை திட்டமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.
வசனம் 119 இல் 286

إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۖ وَلَا تُسۡـَٔلُ عَنۡ أَصۡحَٰبِ ٱلۡجَحِيمِ

Innaaa arsalnaaka bilhaqqi basheeranw wa nazeeranw wa laa tus'alu 'an Ashaabil Jaheem
(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையான மார்க்கத்துடன் (அதை ஏற்பவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும், (அதை நிராகரிப்பவர்களை) எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். இன்னும் நரகவாசிகளைப் பற்றி (நீர்) விசாரிக்கப்படமாட்டீர்.
வசனம் 120 இல் 286

وَلَن تَرۡضَىٰ عَنكَ ٱلۡيَهُودُ وَلَا ٱلنَّصَٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمۡۗ قُلۡ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلۡهُدَىٰۗ وَلَئِنِ ٱتَّبَعۡتَ أَهۡوَآءَهُم بَعۡدَ ٱلَّذِي جَآءَكَ مِنَ ٱلۡعِلۡمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ

Wa lan tardaa 'ankal Yahoodu wa lan Nasaaraa hattaa tattabi'a millatahum; qul inna hudal laahi huwalhudaa; wa la'init taba'ta ahwaaa'ahum ba'dal lazee jaaa'aka minal 'ilmimaa laka minal laahi minw waliyyinw wa laa naseer
(நபியே!) யூதர்களும் கிறித்தவர்களும் அவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்(றி அவர்களைப் போன்று நீர் மா)றும் வரை உம்மைப் பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். “அல்லாஹ் உடைய நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேர்வழியாகும். (ஆகவே, அதையே நான் பின்பற்றுவேன்)” எனக் கூறுவீராக. கல்வி ஞானம் உமக்கு வந்த பின்னர் அவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடம் உமக்கு பொறுப்பாளருமில்லை, உதவியாளருமில்லை.

Surah Al-Baqarah English Translation and Transliteration

In Surah Al-Baqarah you can read the translation of Ahmad Raza Khan who was a renowned scholar of the Islamic world and his translation book is known as Kanzul Imaan. You can read the transliteration of Surah Al-Baqarah which will help you to understand how to read the Arabic text. Apart from that, we have included a Word-By-Word English Translation of the Arabic text of Surah Al-Baqarah.

Surah Al-Baqarah English Tafsir/Tafseer (Commentry)

In Surah Al-Baqarah we have included two Tafseer (Commentary) in English. The first one is from Mufti Ahmad Yaar Khan who was a well-known scholar. In this tafsir, we have also included the most popular Tafsir Ibn-Kathir which is the most comprehensive tafsir available in the world. You can read both or any one of your choice.

Frequently Asked Questions

There are 286 verses / Ayat in Surah Al-Baqarah

Surah Al-Baqarah was revealed in Madinah

Surah Al-Baqarah can be found in Juz or Para 1-3

There are 40 Ruku in Surah Al-Baqarah

Surah number of Surah Al-Baqarah is 2

The meaning of Surah Al-Baqarah is The Calf, The Cow, The Heifer

You can find English Translation, Transliteration and Tafseer/Tafsir of Surah Al-Baqarah here at quranever.com. Here two tafseer are currently.One is Tafsir Ibn-Kathir and another one is Tafsir-e-Naeemi.

Dear bothers and sisters as a Sunni Muslim we cannot say any Translation and Tafseer was as long it conforms with the 4 school of thoughts. But here at quranever.com, we have included Tafsir Ibn-Kathir which is most comprehensive tafsir. Apart from that we have also included tafsir of Mufti Ahmad Yaar khan, Tafsir-e-Naeemi of Surah Al-Baqarah.

Sign up for Newsletter

Drag to move

Configure Reading

Customize your reading experience

Your preferences are saved automatically.
Mobile: drag the button directly to move it anywhere.
×

Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now