குரான் - 5:103 சூரா அல்மாயிதா மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

103
مَا جَعَلَ ٱللَّهُ مِنۢ بَحِيرَةٖ وَلَا سَآئِبَةٖ وَلَا وَصِيلَةٖ وَلَا حَامٖ وَلَٰكِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَۖ وَأَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ

Transliteration: (Maa ja'alal laahu mim baheeratinw wa laa saaa'ibatinw wa laa waseelatinw wa laa haaminw wa laakinnal lazeena kafaroo yaftaroona 'alallaahil kazib; wa aksaruhum laa ya'qiloon)

பஹீரா,* ஸாயிபா,* வஸீலா,* ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனையாக இட்டுக்கட்டுகிறார்கள். இன்னும் அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள்.

சூரா அல்மாயிதா ஆயத்து 103 தஃப்சீர்




*பஹீரா: ஓர் ஒட்டகம் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு குட்டிகளை ஈன்ற பின்னர் அதன் காதை அறுத்து சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவது. *ஸாயிபா: ஓர் ஒட்டகம் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர் அதை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவது. *வஸீலா: தொடர்ந்து பெண் குட்டிகளை ஈன்றெடுக்கும் ஒட்டகத்தை சிலைகளுக்காக நேர்ச்சை செய்வது. *ஹாம்: ஒரு பெண் ஒட்டகை குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு குட்டிகளை ஈன்றெடுக்க சினை ஆகுவதற்கு காரணமாக இருந்த ஆண் ஒட்டகை. அதை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவார்கள்.

Sign up for Newsletter

×

Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now